Inandoutcinema - Tamil cinema news

400 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்த இந்திய பெண்.

சர்வதேச தடகள கழகத்தின் 20 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான சாம்பியன்ஸ் போட்டி பின்லாந்து நாட்டின் டம்பெரி நகரில் ஜூலை 10 ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கல பதக்கத்தை மட்டும் வென்றிருந்த இந்தியா தற்போது முதல் முறையாக தங்கம் வென்றிருக்கிறது.

இந்த 400 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் இந்தியாவின் ஹிமா தாஸ், தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் ஐஏஏஎப் ஜூனியர் சாம்பியன்ஸ் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை 18 வயதாகும் ஹிமா தாஸ் பெற்றுள்ளார்.

இதற்கு முன் 2002 ல் சீமா புனியாவும், 2014 ல் நவஜீத் கவுர் தில்லானும் மட்டுமே இந்தியா சார்பில் வெண்கல பதக்கங்களை பெற்றுள்ளனர். ஹிமா தாஸ் பந்தய இலக்கை 51.46 விநாடிகளில் அடைந்துள்ளார்.

இந்த போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் ஹிமா புதிய வரலாறு படைத்துள்ளார். இதற்கு அமிதாபச்சன், அக்‌ஷய் குமார், இந்திய பிரதமர் மற்றும் ஜனாதிபதி உட்பட பலர் ஹிமா தாசுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news