Inandoutcinema - Tamil cinema news

சரிவில் இருந்து மீண்டு வந்த மேற்கிந்திய அணி – சதத்தை நெருங்கும் ரோஸ்டன் – விவரம் உள்ளே

இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராஜ்கோட்டில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் 2-வது டெஸ்ட் ஐதராபாத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி துவக்க ஆட்டக்காரர்களாக பிராத்வெய்ட் மற்றும் பவல் இருவரும் களம் இறங்கினார்கள். நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்த்த மேற்கிந்திய அணி, அடுத்தடுத்து விக்கட்டுகளை இழந்து தடுமாறியது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி ஒரு கட்டத்தில் 113/5 என்ற நிலையில் இருந்தது. இதனால் விரைவில் ஆட்டம் முடிந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ரோஸ்டன் – ஹோல்டர் கூட்டணி அணியை சரிவில் இருந்து மீட்டது. அரைசதமடித்த ஹோல்டர் 52 ரன்களில் வெளியேறினார். பின்னர் மேற்கிந்திய மேற்கொண்டு விக்கட் விழாமல் பார்த்துக்கொண்டது.

முதல் நாள் ஆட நேர முடிவில் மேற்கிந்திய அணி 295/7 எடுத்துள்ளது. ரோஷ்டன் 98 ரன்களுடனும் பிஷூ 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் மற்றும் குலதீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும் அஷ்வின் ஒரு விக்கட்டும் வீழ்த்தினர். 2ம் நாள் அட்டம் நாளை காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news