சதமடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்த ராகுல். சாதனை படைத்த கோலி. விவரம் உள்ளே

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்யுமாறு பணித்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாசன் ரோய், ஜோஷ் பட்லர் ஆகியோர் ஆரம்பத்திலிருந்தே அதிரடி காட்டியது இந்த ஜோடி 4-வது ஓவரின் இறுதிப்பந்தில் பிரிந்தது. உமேஷ் யாதவ் வீசிய பந்தை அடித்து ஆட நினைத்த ஜாசன் ரோய் (30 ரன்கள்) போல்ட் ஆகி வெளியேறினார். அடுத்ததாக அலெக்ஸ் ஹாலெஸ், பட்லருடன் இணைந்தார்.

இங்கிலாந்து அணி 10 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்களை சேர்த்து இருந்தது. அதிரடியா ஆட வேண்டிய நேரத்தில் குல்தீப் யாதவ் பந்து வீச்சுக்கு இங்கிலாந்து வீரர்கள் இறையனார்கள். குல்தீப், தனது அபார பந்து வீச்சினால் ஒரே ஒவேரில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதற்கு பின் களமிறங்கிய வீரர்களும் மந்தமான ஆட்டத்தையே வெளிபடுத்த, இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்களை சேர்த்தது.

இந்திய அணி தரப்பில் குல்தீப் 5 விக்கெட்டுகளையும், உமேஷ் 2 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி முதல் ஓவரிலேயே 4 ரன்களில் தவான் விக்கட்டை இழந்து தவித்தது.பின்னர் களம் இறங்கிய ராகுல், ரோஹித் இருவரும் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்ய அணியின் ரன்ரேட் நல்ல வேகத்தில் உயர்ந்தது. ஆட்டத்தின் 12.4-வது ஓவரில் ரோகித் சர்மா (32 ரன்கள்) அவுட் ஆகி வெளியேற, கேப்டன் விராட் கோலி ராகுலுடன் இணைந்தார்.

தொடர்ந்து இங்கிலாந்து அணி வீரர்களின் பந்து வீச்சை துவைத்து எடுத்த லோகேஷ் ராகுல் வெறும் 54 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். ஆட்டத்தின் 18.2-வது ஓவரிலேயே இந்திய அணி வெற்றி இலக்கான 160 ரன்களை குவித்து, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. கேப்டன் விராட் கோலி- ராகுல் ஜோடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி 9 ரன்களை எடுத்தபோது டி-20 போட்டிகளில் இரண்டாயிரம் ரன்களை கடந்த நான்காவது வீரர் விராட் கோலி ஆவார். அதேவேளையில், விரைவாக 2000 ரன்களை எட்டிய வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றுள்ளார். விராட் கோலி, 56 போட்டிகளில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக மெக்கல்லம் 66 போட்டிகளிலும், கப்தில் 68 போட்டிகளிலும், சோயப் மாலிக் 92 போட்டிகளிலும் இரண்டாயிரம் ரன்களை கடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news