Inandoutcinema - Tamil cinema news

பொறுமை காட்டும் இந்திய அணி – ஆஸ்திரேலியாவை வீழ்த்துமா – விவரம் உள்ளே

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளது. முதலில் மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா–ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி பிரிஸ்பேன் நகரில் இன்று மதியம் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் பொறுமை காட்டியது. 5வது ஓவரின் முதல் பந்தில் அர்ஷி சார்ட்டை வீழ்த்தி துவக்க ஜோடியை பிரித்தார். பின்னர் களமிறங்கிய க்றிஸ் லின் அதிரடி காட்டினார். கலீல் அகமத்தின் ஒரே ஓவரில் மூன்று சிக்ஸர்களை பறக்கவிட்டார். அடுத்தடுத்த ஓவரிலேயே ஆரோன் பின்ச் மற்றும் க்றிஸ் லின் குலதீப் யாதவ் சூழலில் வீழ்ந்தனர்.

பிறகு மேக்ஸ்வெல் மற்றும் ஸ்டோனிஸ் ஜோடி அதிரடி காட்டி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. பாண்டியாவின் ஒரே ஒவேரில் 3 சிக்ஸர்களை மேக்ஸ்வெல் பறக்கவிட்டது குறிப்பிடத்தக்கது. 3 விக்கெட் இழப்பிற்கு 16. 1 ஓவரில் 153 ரன்கள் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டது. இதை தொடர்ந்து போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் ஆட்டம் 17 ஓவராக குறைக்கப்பட்டது.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கட் இழப்பிற்கு 158 ரன்கள் குவிடக்வர்த் லூயிஸ் விதிப்படி 174 ரன்கள் இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 5 ஓவர் முடிவில் 1 விக்கட் இழப்பிற்கு 41 ரன்கள் எடுத்து பொறுமையாக ஆடி வருகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news