ஆஸ்திரேலியாவை அடக்கிய இந்திய அணி. உலக சாதனை படைத்த இந்திய வீரர் – விவரம் உள்ளே

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் போட்டி தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. அதன்படி இந்தியா–ஆஸ்திரேலியா மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி, அடிலெய்டில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி, முதலில் பேட்டிங்கை துவங்கிய இந்திய அணி, 250 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 235 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, 15 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 3-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து நேற்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இதில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 307 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் புஜாரா மற்றும் ரஹானே ரன்கள் எடுத்து அணிக்கு பலம் சேர்த்தனர்

. ரிஷப் பான்ட் அதிரடியாக 28 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர். பும்ரா மட்டும் களத்தில் நின்றார். ஆஸ்திரேலிய அணி சார்பில் லையன் 6 விக்கெட்டுகளும், ஏ. ஸ்டார்க் 3 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் 1 விக்கெட்டும் எடுத்தனர். இதன்பின் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. ஆட்ட நேர முடிவில் அந்த அணி 49 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில், இன்று கடைசி நாள் ஆட்டத்தில் ஹெட் 14 ரன்கள் எடுத்து வெளியேறினார். அவருடன் விளையாடிய மார்ஷ் 66-வது ஓவரில் பவுண்டரி அடித்து அரை சதம் கடந்து 60 ரன்களில் வெளியேறினார்.

ஹேண்ட்ஸ்கோம்ப் 14, பெய்னி 41 மற்றும் கும்மின்ஸ் 28 ரன்களில் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து லையன் 38, ஹேசில்வுட் (13) ரன்கள் எடுத்து ஆடி வந்தனர். இந்த நிலையில், ஹேசில்வுட் ஆட்டமிழந்துள்ளார். இதனால் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 291 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

அஸ்வின், பும்ரா மற்றும் சமி ஆகியோர் தலா மூன்று விக்கட்டுகளும், இஷாந்த் சர்மா 1 விக்கட்டும் கைப்பற்றியுள்ளனர். இதனால் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியில் 11 கேட்ச் பிடித்த ரிஷபன்ட் ,அதிக கேட்ச் பிடித்த இந்தியர்கள் பட்டியளில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news