புஜாரா சதத்தால் வலுவான நிலையில் இந்திய அணி – மீண்டும் அரைசதமடித்த அகர்வால்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. நான்கு போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 3 போட்டிகளில் 2ல் இந்தியாவும், ஒன்றில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்திய அணி கடைசி டெஸ்டை டிரா செய்தாலே தொடரை கைப்பற்றி விடும். மேலும் 71 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடி வரும் இந்திய அணி புதிய சரித்திரம் படைக்கும் வேட்கையுடன் விராட் கோலி தலைமையில் களமிறங்கி உள்ளது.

இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்புடன் ஆஸ்திரேலியாவும் களமிறங்கி உள்ளது. இந்த நிலையில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணியின் சார்பில் மயங்க் அகர்வால் மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி விளையாடினர். இதில், ராகுல் 9 (6) குறைந்த ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அகர்வாலுடன், புஜாரா கைகோர்த்து விளையாடினார்.

இதில் அகர்வால் அரைசதம் 77 (112) அடித்து ஆட்டமிழந்துள்ளார். புஜாராவும் அரைசதம் கடந்து தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்திய அணி தேநீர் இடைவேளை வரை 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் கேப்டன் கோலி 23 ரன்களில் வெளியேறினார். சிறிது நேரம் தாக்குப்பிடித்து 18 ரன்களில் அஜிங்க்ய ரஹானேவும் ஆட்டமிழந்தார். பின்னர் விஹாரியுடன் ஜோடி சேர்ந்தார் புஜாரா. இருவரும் ஆஸ்திரேலிய பந்துவீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ஆடினார்கள்.

இதற்கிடையில் புஜாரா சதத்தை கடந்தார். இவர்கள் இருவரும் மேற்கொண்டு விக்கட் விழாமல் பார்த்துக்கொண்டனர். முதல் நாள் முடிவில் 90 ஓவர்களில் இந்திய அணி 303/4 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 130 ரன்களுடனும், விஹாரி 39 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தற்போதைய நிலவரப்படி இந்திய அணியின் கையே ஓங்கியிருக்கிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news