Inandoutcinema - Tamil cinema news

இந்திய அணியுடனான 3 ஒரு நாள் போட்டி : வலுவான இலக்கை நிர்ணயித்த மேற்கிந்திய அணி – விவரம் உள்ளே

மே.இ.தீவுகளுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி புனேயில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற கோலி முதலில் மே.இ.தீவுகள் அணியை பேட் செய்ய அழைத்தார். மே.இ.தீவுகளின் தொடக்க இடது கை வீரர் சந்தர்பால் ஹேம்ராஜ் 6வது ஓவரில் பும்ராவை முதலில் கவருக்கு மேல் ஒரு பவுண்டரி அடித்தார். இதில் கடுப்பான வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, அடுத்த பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு ஒரு ஷார்ட் பிட்ச் பந்தை வீசினார்.

ஆனால் ஹேம்ராஜ் நின்ற இடத்திலிருந்து லாங் ஆன் மேல் ஒரு சிக்சரையும் விளாசினார். ஆனால் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத பும்ரா மீண்டும் ஹேம்ராஜ் தொண்டைக்கு ஒரு பவுன்சரை வீசினார், ஹேம்ராஜ் ஹூக் ஷாட் ஆட முயன்றார் பந்து டாப் எட்ஜ் ஆகி பேக்வர்ட் ஸ்கொயர் லெக் திசையில் பவுண்டரிக்கு அரைவழியில் காற்றில் எழும்பியது.

அப்போது தோனி பந்துடனேயே ட்ராவல் செய்து அற்புதமாக கேட்ச் செய்தார். பந்து அவரிடம் இருந்து கொஞ்சம் தள்ளி தரைத் தட்டும் நிலையில் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து கேட்சை எடுத்து உற்சாகத்தில் தூக்கிப் போட்டார். இதன் மூலம் இந்திய அணி முதல் விக்கெட்டைக் கைப்பற்றியது. ஹேம்ராஜ் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். , இந்திய டி20 அணியிலிருந்து நீக்கப்பட்ட தோனி, அணித்தேர்வுக்குழுவுக்கு தன் கேட்ச் மூலம் ஒரு பதிலடியும் வழங்கியது போல் அமைந்தது.

முதல் விக்கட் வீழ்ந்த பிறகு அடுத்தடுத்து விக்கட் விழத்தொடங்கியது. கடுமையாக போராடிய ஹோப், 95 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதி கட்டத்தில் அதிரடி காட்டிய நுர்சே 22 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். அவர் உதவியுடன் மேற்கிந்திய அணி வலுவான இலக்கை எட்டியது.

50 ஓவர் முடிவில் 9 விக்கட் இழப்பிற்கு 283 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணி தரப்பில் பும்ரா 4 விக்கட்டுகளும், குலதீப் யாதவ் 2 விக்கட்டுகளும் மற்றும் புவனேஷ் குமார், சகல், கலீல் அஹமத் தலா ஒரு விக்கட்டும் கைப்பற்றியுள்ளனர். பின்னர் களமிறங்கிய இந்திய அணியில், துவக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கி ஆடி வருகின்றனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news