Inandoutcinema - Tamil cinema news

குல்தீப் குழலில் சிக்கி தவித்த இங்கிலாந்து அணி. ரோஹித் சதத்தால் இந்தியா எளிதில் வெற்றி

இந்திய அணி, தற்போது இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர் போட்டிகளில் விளையாடிவருகிறது. முதலில் நடைபெற்ற டி20 போட்டி தொடரில், 2-1 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியது. இன்னிலையில், நேற்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இங்கிலாந்தின் ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

ஆரம்பத்தில் அதிரடி காட்டிய இங்கிலாந்து ஜோடியை, 11-வது ஓவரில் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் பிரித்தார். ஸ்கோர் 73 ரன்களாக உயர்ந்த போது, குல்தீப் யாதவின் பந்து வீச்சில் ஜாசன் ராய் 38 ரன்னில் வெளியேறினார். அடுத்து ஓவரில் ஜோ ரூட் (3 ரன்) மற்றும் பேர்ஸ்டோ (38 ரன்) இருவரையும் ஒரே ஓவரில் வீழ்த்தினார். இங்கிலாந்து அணி 105 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை (19.2 ஓவர்) பறிகொடுத்து தவித்தது. இதன் பின்னர் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரும், ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்சும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

அணியின் ஸ்கோர் 198 ரன்களை எட்டிய போது, குல்தீப் யாதவ் பந்து வீச்சில் பட்லர் (53 ரன்) விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் ஆனார். அவரது மற்றொரு ஓவரில் பென் ஸ்டோக்ஸ் (50 ரன், 103 பந்து, 2 பவுண்டரி), டேவிட் வில்லி (1 ரன்) நடையை கட்டினர். இறுதியாக இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 268 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 25 ரன்கள் மட்டுமே வழங்கி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்து 269 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 40 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதைத் தொடர்ந்து ரோகித் சர்மாவும், கேப்டன் விராட் கோலியும் நிதானத்தை கடைபிடித்தனர். பிறகு அதிரடியில் வெளுத்துகட்டிய ரோகித் சர்மா, பந்தை சிக்சருக்கு விரட்டி தனது 18-வது சதத்தை பூர்த்தி செய்தார்.

விராட் கோலி தனது பங்குக்கு 75 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். முடிவில் இந்திய அணி 40.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 137 ரன்களுடனும், லோகேஷ் ராகுல் 9 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது ஆட்டம் நாளை நடக்கிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news