ஆஸ்த்திரேலியாவிற்கு அதிர்ச்சி அளித்த இந்திய அணி – விவரம் உள்ளே

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் போட்டி தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. அதன்படி இந்தியா–ஆஸ்திரேலியா மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி, அடிலெய்டில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் புஜாராவின் சதத்தின் உதவியுடன் 250 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. இன்று மொஹமட் சமி முதல் பந்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

இதையடுத்து, தனது முதல் இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரின் 3-வது பந்திலேயே இஷாந்த் சர்மா வீசிய பந்தில் ஆரோன் பிஞ்ச் போல்டு ஆகி ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். இதையடுத்து 3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய உஸ்மான் காவ்ஜாவும், மார்கஸ் ஹரிசும் மிகவும் கவனத்துடன் பேட் செய்தனர். இந்த ஜோடி 45 ரன்கள் சேர்த்து இருந்த நிலையில் அஷ்வின், மார்கஸ் ஹரிசை அவுட் ஆக்கினார்.

அடுத்து வந்த வீரர்களான ஷான் மார்ஷ் 2 ரன், ஹாண்ட்ஸ்கோம்ப் 34 ரன், டிம் பெய்ன் 5 ரன் என சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறினர். ஆஸ்திரேலிய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 88 ஓவர்களுக்கு 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் சேர்த்துள்ளது. அத்துடன் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

டிராவிஸ் ஹெட் 61 ரன்களுடனும் மிட்செல் ஸ்டார்க் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் அஷ்வின் 3 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை விட முதல் இன்னிங்சில் 59 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news