முதல் போட்டியிலேயே கவனம் ஈர்த்த மயங் அகர்வால். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் போட்டியை தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியாவும், பெர்த்தில் நடந்த 2–வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன.

தற்போது தொடர் சமநிலையை (1–1) எட்டியுள்ளதால் மெல்போர்னில் இன்று தொடங்கும் 3–வது டெஸ்ட் போட்டி, ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் பாக்சிங் டே என்ற பாரம்பரிய சிறப்புடன் ஆரம்பித்த இந்த போட்டிக்கான இந்திய லெவன் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களான முரளிவிஜய், லோகேஷ் ராகுல் ஆகியோர் நீக்கப்பட்டனர்.

புதுமுக வீரராக மயங்க் அகர்வால் அறிமுகமானார். டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணியின் சார்பில், மயங்க் அகர்வால் மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். பொறுமையாக ஆடிய விஹாரி 19வது ஓவரில் கம்மின்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் மயங் அகர்வாலுடன் புஜாரா ஜோடிசேர்ந்தார். இருவரும் நேர்த்தியாக ஆடினார். முதல் போட்டியிலேயே அரைசதமடித்த மயங் அகர்வால் 76 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் விராட் கோலி புஜாராவுடன் ஜோடி சேர்ந்தார். ஏதுவான பந்துகளை அடித்தும், சிரமமான பந்துகளை தடுத்தும் ஆடி அணியை வலுவான நிலைக்கு உயர்த்தினர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 89 ஓவர்களில் 2 விக்கட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 68 ரன்களுடன் கோலி 47 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news