விலங்குகளை தேடி ஓடும் கதாநாயகர்கள் – விளக்கி சொல்லும் வடபழனி PRO

என்ன டவுட்டு காலைலையே வீட்டுப்பக்கம் வந்து இருக்க என்ன உன் டவுட்டு சொல்லு விளக்கிறுவோம் என்றார் நம்ம வடப்பழனி PRO. ஆமாம்பா ஒரு மேட்டர் கேள்விப்பட்டேன் என்று வடப்பழனி PRO வீட்டில் கொடுத்த டீயை உறுஞ்சிய படி மேட்டரை கங்கினார் டவுட்டு மன்னன்.

இப்போது சினிமால ஹீரோக்களவிட அவங்க கூட வர ஆடு, மாடு, நாய், குறங்குக்கு தான் கால் ஷீட் கிடைக்குறது கஷ்டமா இருக்காமே! என்ன மேட்டர் பா அது? என்று கேட்டார் டவுட்டு மன்னன்.

ஓ இதுவா, ஆமா டவுட்டு.. முன்னாடிலாம் தமிழ், இந்தி, தெலுங்கு மொழில இயக்குனர்கள் சொந்தமாக கதை எழுதி அதை படமா எடுப்பாங்க அது 150 நாளு, 200 நாளுன்னு ஓடி சாதனை படைக்கும். ஆனா, இப்போலாம் டிரெண்டு மாறிப்போச்சு மற்ற மொழில வர படங்களோட ரயிட்ஸ வாங்கியும், தமிழ்ல டப் செய்தும் ரிலீஸ் செய்யுறாங்க. ஆனா அதுலையும் ஒரு சில படங்கள் நள்ளா ஓடுது, மத்தது அட்டர் பிளாம் ஆவுது.

ஓகே அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம் என்றார் டவுட்டு.

இருக்கு, சம்மந்தம் இருக்கு! சொல்றேன் கேளு. தமிழ் சினிமால இந்த உண்மையை அறிஞ்ச சில சினிமா வியாபார புரோக்கர்கள். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களை சந்திச்சு அறிவுரை வழங்கி இருக்காங்க. அதன்படிதான் இப்போ நம்ம புரோடியுசர்களும், ஹீரோக்களும் நடந்துக்குறாங்க என்றார் வடப்பழனி PRO.

அப்படி என்னப்பா அறிவுரை வழங்குனாங்க இவங்க என்று கிளரி கேட்டார் டவுட்டு மன்னன்.

தமிழ் திரைப்படங்கள வேறு மொழில வியாபாரம் செய்யுரது நம்ம ஆளுங்களுக்கு பெரிய பிரச்னையா இருக்கு. அதனால நீங்க மத்த மொழிக்காறங்களுக்கு பிடிக்குறா மாதிரி படம் தயாரித்து கொடுங்க. சீக்கிரம் வியாபாரம் செய்து நாலு காசு பாக்களாம் என்று ஆறிவுரை வழங்கி இருக்காங்க. என்று விளக்கினார் வடப்பழனி PRO.

இன்னும் டவுட்டுக்கு டவுட்டு தீரல.. அவுங்களுக்கு எந்த மாதிரி படம் பிடிக்கும் என்று அடுத்த கேள்வி கேட்டார்..

தற்போது மற்ற மொழி படங்கள்ல விளங்குகள் வைத்து படம் எடுங்குறாங்க அதை மக்களும் ரசிக்கிறாங்க. அந்த மாதிரி தமிழ்லையும் படம் வந்தா மக்கள் ரசிச்சு பாப்பாங்க, இதுல நம்ம தமிழ் ஹீரோக்களுக்கும் பிரச்னை இல்லையாம் அவர்ங்களுக்கு படம் ஓடுனா போது எடுக்கூட வேனா நடிக்க நாங்க ரெடின்னு சொல்லிட்டாங்களாம்.. அதனால தயாரிப்பாளர்ளும் குஷி ஆயிட்டாங்கலாம் என்றார் வடப்பழனி PRO.

ஓஹோ.. அதனாலதான், இப்போ நம்ம சூப்பர் குட் நடிகர் கொரில்லா கூட நடிக்றாரா என்றார் டவுட்டு மன்னன்.

அவரு மட்டும் இல்ல பிக் பாஸ் வின்னர் யானைய வெச்சு ஒரு படம், தளபதி தம்பி ஒட்டகத்த வைச்சு ஒரு படம், நயந் காதலன் மற்றும் செல்வன் ஹிரோ நாய் கூட நடிக்குற படங்களும் எடுக்குறதுக்கும் இதுதான் காரணம்ன்னு சொல்றாங்க என்றார் வடப்பழனி PRO.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news