September 21, 2018
Inandoutcinema - Tamil cinema news

“இம்சை அரசன்” படத்துக்கு ஓகே சொன்ன வடிவேலு

சென்னை: 2006ம் ஆண்டு வடிவேலு நடிப்பில் சங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கிய படம் ”இம்சை அரசன் 24ம் புலிகேசி”

இப்படம் வடிவேலு திரையுலக வாழ்க்கையில் மிக முக்கிய படமாக அமைந்தது. சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் 2ம் பக்கத்தை எடுக்க முடிவு செய்து சென்னையில் ரூ.6 கோடி செலவில் சரித்திர கால அரங்குகள் அமைத்து இயக்குனர் சிம்புதேவன் படப்பிடிப்பை தொடங்கினார்.

ஆனால் நடிகர் வடிவேலு சூட்டிங் சரியாக வருவதில்லை, காட்சிகளை மாற்றச்சொல்கிறார் என்று புகார் எழுந்தது. இதனால் வடிவேலுக்கும் – படக்குழுவினருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் படப்பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டது.

இது ஒருபுறம் இருக்க்க படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்ட அரங்கில் குறித்த நேரத்தில் படப்பிடிப்பு நடக்காததால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு வடிவேலுவிடம் ரூ.9 கோடி நஷ்ட ஈடு பெற்று தரும்படி படக்குழுவினர் தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் புகார் அளித்தனர். அதற்கு நடிகர் வடிவேலு அவர்கள் தான் குறித்த நேரத்தில் படப்பிடிப்பை தொடங்கவில்லை இதனால் எனக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது எனவே ரூ.2 கோடி கொடுத்தால் படத்தில் நடிப்பதக்க கூ றியிள்ளார்.

தொடர்ந்து நடந்த பல கட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு தயாரிப்பாளர் சங்கம், வடிவேலுக்கு ஒன்று படத்தில் நடித்து கொடுக்க வேண்டும் அல்லது தயாரிப்பாளருக்கு ஏற்படட நஷ்டத்தை அடைக்க வேண்டும் எனறு கேடு விதித்தது.

இதையடுத்து வடிவேலு படப்பிடிப்பில் கலந்து கொள்ள வடிவேலு முடிவு செய்திருப்பதாக தற்போது புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news