Inandoutcinema - Tamil cinema news

தல படத்தின் இசையை பற்றி மனம் திறந்த இமான் -விவரம் உள்ளே

விவேகம் படத்திற்கு அடுத்து தல அஜித் நடிக்கும் திரைப்படம் விசுவாசம். இந்த படத்தை சிவா இயக்க, சத்யஜோதி நிறுவனம் விஸ்வாசம் படத்தை தயாரிக்கிறது. வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து மீண்டும் 4 வது முறையாக இயக்குனர் சிவாவுடன் கூட்டணி வைத்துள்ளார் தல அஜீத். இந்த படத்தில் தல அஜீத்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டாரான நயந்தாரா நடித்து இருக்கிறார்.

பில்லா, ஏகன், ஆரம்பம் படங்களை தொடர்ந்து இவரும் தல அஜீத்துடன் 4 வது முறையாக இணைந்துள்ளார். அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்படும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகிய வண்ணம் உள்ளது. அண்மையில் அஜித் கலைஞர் அவர்களை மருத்துவமனையில் சந்தித்த புகைப்படங்கள் வெளியாகி படு வைரலானது.

இன்னிலையில் இசையமைப்பாளர் டி.இமான் சமீபத்திய பேட்டியில் ருசிகர தகவல் ஒன்றை கூறியுள்ள. அதில் அவர் கூறியுள்ளதாவது : அறிமுக பாடலை கேட்டுவிட்டு அஜித் அவர்கள் எனக்கு போன் செய்தார். அப்போது பாடல் சூப்பராக இருக்கிறது, செட்டில் அனைவரும் ரசிக்கிறார்கள், கொண்டாடுகிறார்கள் என இசையமைப்பாளர் இமான் கூறியுள்ளார். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news