இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கேமியோ பிலிம்ஸ் தயாரிக்கும் படம் தான் இமைக்கா நொடிகள் ஆகும். இப்படத்தில் நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப் என முன்னணி பிரபலன்களோடு தொடங்கப்பட்ட இப்படம் ரிலீஸுக்குத் தயாராகி இருக்கிறது. பல்வேறு காரணங்களால் பட ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டு வந்த நிலையில், படம் குறித்து முக்கிய அறிவிப்பை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இந்த படத்தின் மூலம் இந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப் தமிழில் அறிமுகமாகிறார். மிரட்டும் வில்லனாக அவர் இந்த படத்தில் நடித்துள்ளதாகவும், அவர் கதாபாத்திரம் பேசப்படும் வகையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதர்வாவின் அக்கா கேரக்டரில் உளவாளியாக நயன் நடித்திருக்கிறார். அவரது கணவராக கேமியோ ரோலில் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார்.
ஆக்ஷன் த்ரில்லராக உருவாகி வரும் இந்த படத்தில் அதர்வா ஜோடியாக ராஷி கண்ணா தமிழில் அறிமுகமாகிறார். இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்தது. படத்தின் போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. நீண்டநாட்களாக படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்திருக்க, ரிலீஸுக்கான வேலைகளை தயாரிப்பு நிறுவனம் மும்மரமாக தொடங்கியிருக்கிறது.
முதற்படியாக படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு வரும் 27ம் தேதி நடைபெறும் என கூறப்படுகிறது. இதனால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டுக்குப் பின்னர் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று படக்குழுவினர் கூறியிருக்கிறார்கள். விரைவில் இது பற்றி