September 24, 2018
Inandoutcinema - Tamil cinema news

நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படத்தின் வெளியீட்டிற்கு தடை – அதிர்ச்சியில் படக்குழு – விவரம் உள்ளே

டிமாண்டி காலனி என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கிய, இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கேமியோ ஃபிலிம்ஸ் சிஜே ஜெயகுமார் தயாரிப்பில், அதர்வா, நயன்தாரா, அனுராக் கஷ்யாப், ராஷி கண்ணா ஆகியோர் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் எமோஷனல் ஆக்‌ஷன் திரில்லர் படம்தான் இமைக்கா நொடிகள் ஆகும்.

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதில் விஜய் சேதுபதி, நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப் என முன்னணி பிரபலங்கள் பலர் நடித்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியிருந்தது. ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கும் இந்த படம் இன்று வெளியாகும் [ ஆகஸ்ட் 30 ] என கூறப்பட்டது.

இதனால் பொதுமக்கள் திரையரங்கிற்கு படையெடுத்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பின்பு விசாரித்ததில் இமைக்கா நொடிகள் படத்தின் ஹிந்தி உரிமையை, படக்குழு இருவரிடம் விற்று இருப்பதாக கூறப்படுகிறது. அதில் பணப்பிரச்சனை ஏற்பட்டதால் இமைக்கா நொடிகள் படம் இன்று வெளியாகவில்லை என கூறப்படுகிறது.

திரையரங்கு நிர்வாகிகளிடம் விசாரித்ததில், படம் இன்று மாலை வெளியாகும் என கூறியுள்ளனர். ஆனால் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வரையில் இமைக்கா நொடிகள் படம் வெளியாக வாய்ப்பில்லை என நெருங்கிய திரை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர். இதனால் படக்குழுவும் மாறும் ரசிகர்களும் கடும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news