கல்லூரி மாணவிகளுக்கு வாய்ப்பளித்த இளையராஜா

Ilayaraja with students

இசைஞானி இளையராஜாவிற்கு இந்த வருடம் 75 அகவையை கடந்தார். இதற்க்காக அவருக்கு பல்வேறு துறையில் இருந்து வாழ்த்துக்களும் பாராட்டு விழாக்களும் எடுக்கப்பட்டு வருகிறது. இன்னிலையில் இளையராஜா எத்திராஜ் கல்லூரி , ராணி மேரி கல்லூரி என இரண்டு மகளிர் கல்லூரி விழாக்களில் கலந்து கொண்டார். அங்கே அவரது பிறந்த நாள் விழாவையும் மாணவிகள் முன்னிலையில் கேக் வெட்டிக் கொண்டாடினார். இந்நிகழ்ச்சியில் பேசியும் பாடியும் அவர் கல கலப்பூட்டினார்.

கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடியதுடன் அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். அப்போது அவரது இசையைப் பற்றி மாணவிகள் சந்தேகங்கள், கேள்விகள் கேட்டுத் தெரிந்து கொண்டனர். அப்போது அந்த இரண்டு கல்லூரிகளிலும் மாணவிகள் சிலர் பாடல்கள் பாடியதுடன் அவரது இசையில் தாங்கள் பாடவும் விரும்புவதாகவும் அது தங்கள் கனவென்றும் மாணவிகள் தங்கள் விருப்பத்தை வெளியிட்டிருந்தனர். இது இசைஞானி இளையராஜாவின் எண்ணத்தில் அலையடித்திருக்கிறது. அதன் விளைவாக இப்போது இரண்டு கல்லூரியிலும் இசை விருப்பமுள்ள, பாடகியாக ஆசைப்பட்ட மாணவிகள் சிலரை அழைத்துக் குரல் சோதனை வைத்து இருக்கிறார் இசைஞானி. அவர்களில் பாடும் திறன் கொண்ட 9 மாணவிகளைத் தேர்வு செய்து இருக்கிறார். இந்த ஒன்பது பேரும் இளையராஜா இசையமைக்கும் அடுத்தடுத்த படங்களில் பாடகியாக அறிமுகமாகிவுள்ளனர். இசைஞானி மூலம் தங்கள் கனவு நினைவானதால் அந்த 9 மாணவிகளும் இளையராஜாவிற்கு நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் இளையராஜாவின் இந்த செயலுக்கு பல்வேறு பாராட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news