#தல59 பிங்க் ரீமேக் – டாப்சி நடித்த கதாப்பாத்திரத்தை நடிக்கபோவது இவர் தானா?

சென்னை: தல அஜித்குமாரின் விஸ்வாசம் படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. இதற்காக படத்தின் புரோமோஷன் பணிகள் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், தல அஜித்தின் 59 படம் குறித்த பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன.

அதன்படி தல அஜித், பாலிவுட்டில் வெளியாகி வரவேற்ப்பை பெற்ற ‘பிங்’ திரைப்படத்தின் தமிழ் ரிமேக்கில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. மேலும், இந்த படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்குவதாகவும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பதாகவும், ஏ.ஆர்.ரஹமான் இசை அமைக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால், தல59 படத்தின் இயக்குனர் வினோத் இது பிங்க் ரிமேக் இல்லை என்று தெரிவித்திருந்தார். இருப்பினும் இந்த படம் பிங்க் படத்தின் ரீமேக் தான் என்று செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில், தல59 படத்தின் பூஜை நேற்று முன்தினம் நடந்தது.

அதேவேலையில், இந்த படத்துக்கு முன்பு ஏ.ஆர்.ரஹமான் இசை அமைக்க இருந்த நிலையில் தற்போது யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த தகவலையும் யுவன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், ‘நீண்ட வருடங்களுக்கு பிறகு தலையுடன் இணையந்து பணியாற்றவுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தல59 படத்தில் முதல்முறையகாக நடிக்க நஸ்ரியா ஒப்பந்தமாகி உள்ளார். இதனை அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், தல59 படத்தின் புகைப்படங்கள் மற்றும் அப்டேட்டுகளுக்காக காத்திருங்க என்று தெரிவித்துள்ளார். ஆனால், இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news