September 23, 2018
Inandoutcinema - Tamil cinema news

ஆரம்பத்தில் எனது படங்களுக்கான அடையாளமே இவர்தான் – தனுஷ்

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பளர்களில் ஒருவராக வளம் வருபவர்தான் யுவன் ஷங்கர் ராஜா ஆகும். யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ஹரீஷ் கல்யாண், ரைஸா வில்சன் நடித்திருக்கும் படம் பியார் பிரேமா காதல் ஆகும்.

இளன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இசைஞானி இளையராஜா கலந்து கொண்டு இசையை வெளியிட்டார்.

இந்த விழாவில் முன்னணி திரை பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் முன்னணி திரை பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். இந்த கலந்துகொண்டு பேசிய நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முக தன்மைகொண்டவரான தனுஷ் கூறியதாவது : எல்லா கலைஞனுக்குமே காதல் தான் ஒரு உந்துசக்தி, காதல் இல்லாமல் இந்த உலகில் எதுவுமே இல்லை.

துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன் படங்களின்போது நானும், செல்வராகவனும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தபோது யுவன் இசை தான் எங்கள் படங்களுக்கு அடையாளமாக இருந்தது. நான் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன், யுவன் என் குடும்பத்தில் ஒருவர். அவர் அழைத்தால் எங்கிருந்தாலும் வருவேன் என நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news