‘ரிஷப் பண்ட்’ அணியில் இடம் இல்லை – அதிர்ச்சியில் கிரிக்கெட் வாரியம்

இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30, 2019ல் துவங்கி ஜூன் 14, 2019 வரை நடக்கவுள்ளது.

மொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் – அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கவுள்ளது. இத்தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில் அனைவரும் ஆர்வமாக எதிர்பார்த்த இளம் வீரர் ‘ரிஷப் பண்ட்’ தேர்வு செய்யப்படவில்லை. இதற்கான காரணத்தை கிரிக்கெட் வாரியம் தலைவர் எம்.எஸ்.கே., பிரசாத் விளக்கம் அளித்துள்ளார்.

இதுபற்றி பிரசாத் கூறுகையில், ‘ரிஷப் பண்ட் திறமையான வீரர் தான். அவர் தற்போதைய உலகக்கோப்பை கிரிக்கெட் அணியில் இல்லாதது துரதிருஷ்டவசமானது. அதே நேரம் நெருக்கடியான நேரத்தில் தினேஷ் கார்த்திக் சிறப்பான செயல்பாடை பார்க்க முடிந்தது. அதனால் அனுபவ அடிப்படையில் தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்தோம்.’ என்றார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news