September 23, 2018
Inandoutcinema - Tamil cinema news

ஹீரோக்கள் மீதான சுமை எப்படி இருக்கும் என்பதை இந்த படத்தில் நான் உணர்கிறேன் – சமந்தா

ஷரத்தா ஸ்ரீ நாத் நடிப்பில் 2016 – ம் ஆண்டு கன்னட மொழியில் யு-டர்ன் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை லூசியா பட இயக்குநர் பவன்குமார் இயக்கியிருந்தார். ஒரு மேம்பாலத்தில் விதிமுறை மீறி யு-டர்ன் எடுப்பவர்கள் இறந்து போகிறார்கள். அதற்கு பின்னால் இருக்கும் மர்மத்தைப் பற்றியதே இந்தப் படத்தின் கதை.

கடந்த வருடம் இதே படம் மலையாளத்தில் கேர்ஃபுல் என்ற பெயரில் வெளியானது. தற்போது தமிழ் மற்றும், தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு உருவாகியுள்ளது. அதிக வசூலை குவித்த இந்தப் படத்தை இந்தியிலும் இயக்க உள்ளார் இயக்குநர் பவன் குமார். இந்த படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்பில் சமந்தா, ஆதி, ராகுல் ரவிந்திரன், பூமிகா சாவ்லா, நரைன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் நடிகை சமந்தா கூறியதாவது : ட்ரெய்லர் ரிலீஸ் ஆனபோது 2 மில்லியன் வியூஸ் போகும், ரசிகர்கள் இவ்வளவு பெரிய ஆதரவு தருவார்கள் என நான் எதிர்பார்க்கவே இல்லை. இந்த படத்தில் யாரும் நாயகன், நாயகி என இல்லை. கதை தான் படத்தின் மிகப்பெரிய ஹீரோ. லூசியா படத்தில் இருந்தே நான் பவன் குமாரின் பெரிய ரசிகை.

அப்போதே இவருடன் ஒரு படம் பண்ணனும்னு ஆசைப்பட்டேன். இந்த படத்தில் அது நிறைவேறியிருக்கிறது. இந்த படம் வெறும் திரில்லர் மட்டுமல்ல. இது ஒரு பெரிய பயணம். எல்லா உணர்வுகளையும் உள்ளடக்கியது. முழு மூச்சில் ஒரே கட்டமாக இந்த படத்தை முடித்தோம். தமிழில் தனஞ்செயன் சார் ரிலீஸ் செய்கிறார்.

இப்போது பாதுகாப்பான கைகளில் இந்த படம் இருப்பதாக உணர்கிறேன். மிகவும் யதார்த்தமாக கதாபாத்திரங்களில் நடிக்க எப்போதுமே ஆசை. அது தான் இந்த படத்துக்குள் என்னை கொண்டு வந்தது. படத்தில் நிறைய எமோஷனல் காட்சிகள் உண்டு. எனக்கு கிளிசரின் போட்டு நடிப்பது பிடிக்காது.

கஷ்டப்பட்டு ஒரு காட்சியில் நடித்த முடித்தவுடன் இன்னொரு மொழியில் அதே காட்சியை நடிக்க வேண்டும். அது மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஹீரோக்கள் மீதான சுமை எப்படி இருக்கும் என்பதை இந்த படத்தில் நான் உணர்கிறேன் என நடிகை சமந்தா கூறியுள்ளார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news