Inandoutcinema - Tamil cinema news

பேன்ஸ் இருக்கா என்று கேட்டவருக்கு உதயநிதியின் பதில்!

சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர்கள், அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள், தன்னாலர்வர்கள், அரசு அலுவலர்கள் என பலர் பணம்,  நிர்வாரண பொருட்கள் என வழங்கி வருகின்றனர்.

இதில், தமிழக அரசு கஜா புயல் நிவாரணத்திற்கு 1000 கோடி நிதி அளிப்பதாக அரசாணை வெளியிட்டுள்ளது. திமுக சார்பில் 4 கோடி நிர்வாரண நிதியும், ஏராளமான நிவாரணப்பொருட்களும் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. இதே போன்று, நடிகர் சிவகுமார், விஜய், விக்ரம், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், நடிகை கஸ்தூரி, நடிகர் ராகவா லாரன்ஸ், நடிகர் ஜீ.வி.பிரகாஷ் என்று பலரும் தங்களால் முடிந்த உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் உதயநிதி ஸ்டாலில், தனது ரசிகர் மன்றம் மூலம் நிவாரண பொருட்களை அனுப்பியுள்ளார். இந்த தகவலை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

இந்த டிவீட்டை நெட்டீசன் ஒருவர் உதயநிதியை உனக்கு பேன்ஸ்லாம் இருக்கா? கலாய்ப்பதுபோல் கேட்டுள்ளார்.

அதற்கு உதய் பதில் அளித்துள்ளார். அதில் பேன்லாம் இல்ல நண்பா நற்பணி செய்ய எப்போதும் தயாராக இருக்கும் நண்பர்கள் என்று கூறியுள்ளார்.

இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news