தேவர்மகன்-2 தலைப்பை நான் முடிவு செய்ய வில்லை – கமல் ஹாசன்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின்  தலைவர் நடிகர் கமல்ஹாசன்  இன்று சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:

பாலியல் குற்றச்சாட்டுகள் சினிமா துறை மட்டுமல்ல எல்லா துறைகளிலும் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது வெளிவந்தால் இதுபோன்ற தொந்தரவுகள் இனி இல்லாமல் இருக்கும் என்பது தான் உலக அளவில் பேசப்பட்டிருக்கிற வி‌ஷயம். ஆனால் இரண்டு தரப்பிலும் நியாயத்தை கேட்க வேண்டிய அவசியம் இருக்கிறது. சினிமா துறையில் நாங்கள் செய்வதை எல்லாம் நீங்கள் படம் பிடித்து காட்டுகிறீர்கள். இதனால் சினிமாவில் பாலியல் பிரச்சினை அதிகமாக தெரியலாம்.

தேவர்மகன்-2 என்ற தலைப்பு அரசியலுக்காக வைக்க வில்லை. எனக்கு ஜாதியில் விருப்பம் கிடையாது. ராஜ் கமலின் 6-வது படத்தை திருப்பி எடுக்கிறேன் என்று சொன்னால் உங்களுக்கு புரியாது. அதற்காக இந்த படத்தின் பெயரை குறிப்பிட வேண்டி இருக்கிறது. படத் தலைப்பு இன்னும் நான் முடிவு செய்யவில்லை. கண்டிப்பாக அந்த பெயர் இருக்காது. ஜாதி பெயரை ஏன் வைக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். இது எல்லா சாதிக்கும் எதிரான படம்தான். நான் எடுக்கும் படங்கள் எல்லாமே அப்படித்தான். உட்கருத்து அதுவாக இருக்கும். விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம்.

எனது அரசியல் செயல்பாடுகளை விமர்சிக்கிறார்கள் என்றால் அதை கவனிக்காமல் விட்டு விட்டால் தான் தப்பு. ரொம்ப கவனிக்கிறார்கள். நான் எது சொன்னாலும் பிரச்சினை செய்து கொண்டிருக்கிறார்கள். அது நல்லது. நான் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறேன் என்பதை இது காட்டுகிறது.

சபரிமலை கோவிலுக்கு நான் போனது கிடையாது. எனவே அதைப்பற்றி அதிகமாக தெரியாது. வெளியில் இருந்து கேட்ட கதைகள்தான். எல்லா இடங்களிலும் பெண்களுக்கு சமமான இடங்கள் இருக்க வேண்டும் என்பது என்னுடைய கருத்து. ஆனால் எனது கருத்தை கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news