Inandoutcinema - Tamil cinema news

பிரதமர் மோடி முதல் ஜூனியர் என்.டி.ஆர் வரை…! பிட்னஸ் சேலஞ்ச் பட்டியலில் அடுத்த பிரபலங்கள் யார்…

சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய விளையாட்டுதுறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் இந்திய மக்களிடம் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நாம் ஃபிட்டாக இருந்தால், இந்தியா ஃபிட்டாக மாறும் (HumFitTohIndiaFit) என்ற பிரச்சாரத்தை தொடங்கிங்கினார்.

மேலும், அவர் உடற்பயிற்சி செய்யும் ஒரு வீடியோவை வெளியிட்டு இந்த சவாலை ஏற்கும்படி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி, பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன், பேட்மிட்டன் வீராங்கனை சாயினா நேவால் ஆகியோருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

விருவாரா விராட் கோலி உடனே அந்த சவாலை ஏற்று தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பதிவிட்டார். கூடவே, இந்த சவாலை ஏற்கும்படி டிவிட்டரில் ஒரே போடாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்துவிடார். யாருமே எதிர்பார்க்காத வித்ததில் 24 மணி நேரத்தில் பிரதம் மோடி விராட் கோலியின் சவாலை ஏற்பதாக ரிப்ளை செய்திரூந்தார். பிரதமரே கலத்தில் இறங்கிட்டாரு என்று அதன் பின்னர், சேலஞ்சை விளையாட்டு வீரர்கள், நடிகர்கள், அரசியல் பிரபலங்கள் ஏற்றி செய்து வருகின்றனர். இது இந்தியா முழுவதும் வைரலாக பரவி வருகிறது.

இதற்கிடையில், மலையால நடிகர் மோகன் லால் தானாக முன்வந்து இந்த பிட்னஸ் சேலஞ்சை ஏற்றார். தான் உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை பதிவிட்டு, அதை ஏற்கும்படி தமிழில் நடிகர் சூரியா, தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், மலையால நடிகர் பிரித்விராஜ் ஆகியோருக்கு அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், நடிகர் மோகன்லாலின் சவாலை ஏற்று ஜூனியர் என்டிஆர் இன்று தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், அவர் தனது சகோதரர் கல்யான் ராம், இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி மற்றும் சிவா கோட்டாரலா, நடிகர் மகேஷ் பாபுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஜூனியர் என்.டி.ஆர்-ரை அடுத்து பிரபலங்கள் பிட்னஸ் சேலஞ்ச் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news