September 19, 2018
Inandoutcinema - Tamil cinema news

யுவனின் ரசிகர்களுக்காக பேய் பசி படத்தின் இயக்குனர் செய்த புது யுக்தி. விவரம் உள்ளே

தமிழ் சினிமாவில் முன்னணி இசை  அமைப்பாளர்களில் யுவன் ஷங்கர் ராஜா ஒருவர். அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் தன்னுடைய சொந்த தயாரிப்பில் வெளி வர இருக்கும் பியார் பிரேமா காதல் படத்தில் இடம் பெற்று உள்ள high on love பாடல் மூலம் தன்னுடைய பெருகி வரும் ரசிகர் பட்டாளத்தை மேலும் விஸ்தரித்துக் கொண்ட யுவன் ஷங்கர் ராஜா , தன்னுடைய சகோதரர் ஹரி கிருஷ்ணன் பாஸ்கர் நடிக்கும்  பேய் பசி படத்தில் இடம் பெறும் ஒரு பாடலை அவரே இசை அமைத்து, பாடி, நடனமும் ஆடி இருக்கிறார்.  பேய் பசி படத்தை இயக்கி இருப்பவர் அறிமுக இயக்குனர் ஸ்ரீனிவாஸ் கவினயம் ஆகும். விஜய் சேதுபதியின் சூது கவ்வும், சித்தார்த்தின் தீயாய் வேலை செய்யணும் குமாரு, ஆகிய படங்களுக்கு இவர் இணை கதை ஆசிரியர் என்பது குறிப்பிட தக்கது. இந்த படத்தில் பாடல் இல்லாததால் யுவனின் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர். அதற்காகவே ஒரு பாடல், புரமோஷன் பாடலாகவாவது இருக்கட்டும் என்று ஒரு பாடலை சேர்த்தோம். அதில் அவரே முன் வந்து நடித்தும், நடனம் ஆடியும் தந்தது பேய் பசி படத்துக்கு மிக பெரிய பலம் என இயக்குனர் ஸ்ரீனிவாஸ் தெரிவித்தார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news