Inandoutcinema - Tamil cinema news

எல்.கே.ஜி. அரசியல் பின்னணியை பற்றி பேசும்: ஆர்.ஜே.பாலாஜி

சென்னை: ரேடியோ ஜாக்கி பாலாஜி அரசியலில் இறங்கப் போவதாகவும், தனிக் கட்சி தொடங்கப் போவதாகவும் சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. ஆனால், அது ஒரு படத்துக்கான விளம்பரம் என பின் தெரிய வந்தது. ‘எல்.கே.ஜி.’ என அப்படத்துக்கு தலைப்பு வைத்துள்ளனர்.

இந்தபடத்தில் ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடிக்கிறார். கதை, திரைக்கதை ஆர்.ஜே.பாலாஜி அமைக்க, பிரபு படத்தை இயக்குகிறார். வேல் productions சார்பில் டாக்டர் கே.கணேஷ் தயாரிக்கிறார்.

இது குறித்து ஆர்.ஜே.பாலாஜி கூறுகையில்; நிமிடத்துக்கு நிமிடம் “பிரேக்கிங்நியூஸ்” என்னும் காலகட்டத்தில் வாழ்ந்து வரும் இன்றைய இளைஞர்களுக்கு, அரசியல் பின்னணியை பற்றியும், அரசியல் வாதிகளின் பின் புலத்தையும்  பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் அதிகம் இருக்கும். அவர்களுக்கான படம் தான் “எல்கேஜி”.

நாஞ்சில் சம்பத்சார் இந்தப் படத்தில் எனக்கு அப்பாவாக நடிக்கிறார். பல்வேறு காலக்கட்டங்களில் மக்களை மகிழ்விக்கும் பொறுப்பை மேற்கொண்ட அவருக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அதிகம். அவர்களும் அவருடைய கதாபாத்திரத்தை கொண்டாடுவார்கள்.

ப்ரியா ஆனந்த் எனது நீண்டநாள் தோழி. இவர் ஒரு கதாநாயகி என்பதையும் தாண்டிதந்த  பங்களிப்பு பாராட்டுதலுக்கு உரியது.

லியோன் ஜேம்ஸ் இசை அமைக்கிறார். “மேயாதமான்” படத்தின் ஒளிப்பதிவாளர் விது ஒளிப்பதிவு செய்கிறார்.

திரைக்கதைக்கு அப்பால் வெளியே நடக்கும் அரசியல் விந்தைகளையும் தாண்டி இந்த படம் எல்லா தரப்பு ரசிகர்களையும்  ஈர்க்கும் என்று அவர் கூறினார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news