Inandoutcinema - Tamil cinema news

படப்பிடிப்பு பணிகள் இனிதே முடிந்தது: #PyaarPremaKaadhal அப்டேட்ஸ்

சென்னை: விஜய்டிவி, பிக்பாஸ் பிரபலங்கள் ஹரிஷ் கல்யாண் – ரைஸா வில்சன்  நடித்திருக்கும் படம் ’’பியார் பிரேமா காதல்’’ அறிமுக இயக்குனர் இலன்  படத்தை இயக்குகிறார். Y S R films மற்றும்  K productions  சார்பில் யுவன் ஷங்கர் ராஜா, எஸ் என் ராஜ ராஜன், இர்பான் மாலிக் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

காதல், ரொமேன்ஸ், காமெடியாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பெங்களூரு, கொல்கத்தா உள்பட பல்வேறு இடங்களில் நடந்து  வந்தது. இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பு பணிகள் இனிதே முடிவடைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் யுவன் கூறுகையில்

“இயக்குநர் இலன் என்னிடம் கதைசொல்லும் போதே, ஒரு இசை அமைப்பாளராக என் பங்களிப்பை வழங்க பெரும் வாய்ப்பு இருப்பதையும் கணித்து கொண்டேன்.

ஹரிஷ் கல்யாண் – ரைசாவி ல்சன் அவர்களுக்குள் இருக்கும் “chemistry” தான் “high on love”  பாடல். இந்த படத்தில் பாடல் காட்சிகளுக்காக இதுவரை படப்பிடிப்பு நடந்திராத இடத்துக்கு செல்ல வேண்டும் என்ற முனைப்பில் அசர்பேஜான் என்ற நாட்டுக்கு சென்றோம்.

காதலுக்கு என்று ஒரு நாட்டை உருவாக்கினால் அது அசர் பேஜான் தான். காதல் தேசம் என்று அழைக்கலாம். அத்தனை அழகு. ஒவ்வொரு யுகத்துக்கும் ஒரு காதல் படம் வரும், வந்து வெற்றி பெறும் என்பார்கள்.

இந்த யுகத்துக்கு “பியார் பிரேமா காதல்” என்று நான் உறுதியாக கூறுவேன். என்றார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news