Inandoutcinema - Tamil cinema news

எதிர்பார்ப்பில்லாமல் வைரலான ஒரு குப்பை கதை படத்தின் ட்ரைலர். காணொளி உள்ளே

முன்னணி நடிகர்களின் பல படங்களுக்கு நடன கலைஞராக பணிபுரிந்து, தனது அயராது உழைப்பால் தேசிய விருதையும் வென்றுகாட்டியவர்தான் தினேஷ் ஆகும். தற்போது இவரது கவனம் நடிப்பில் திரும்பியிருக்கிறது. இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘ஒரு குப்பை கதை’. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக வழக்கு எண் புகழ் மனிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குநர் அஸ்லம் தயாரித்திருக்கும் இப்படத்தை அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த காளி ரங்கசாமி இயக்கியுள்ளார். இந்தப்படத்தை தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் வெளியிடுகிறார் உதயநிதி. மே-25ஆம் தேதி இந்தப்படம் ரிலீசாக உள்ள நிலையில் இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், ஆர்யா, சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த், நாகேந்திர பிரசாத், இயக்குனர்கள் அமீர், பாண்டிராஜ், எழில், சீனு ராமரசாமி, பொன்ராம், சுசீந்திரன் உள்ளிட்ட உள்ளிட்ட பலர் கலந்தகொண்டனர்.  இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியாகியுள்ளது. தற்போது வரை இந்த படத்தின் ட்ரைலரை 95 ஆயிரம் பார்வையாளர்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news