September 20, 2018
Inandoutcinema - Tamil cinema news

தோணி நல்ல கேப்டன் தான். அவர் மீது மரியாதையை இருக்கிறது. ஆனால்………

தோணி தலைமையிலான இந்திய அணி 2007 ஆம் ஆண்டு 20 ஓவர் மற்றும் 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையை வென்றது. இந்த இரண்டு உலக கோப்பையை வென்ற அணியிலும் இடம் பிடித்தவர் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் ஆகும். தனது ஆக்ரோஷமான பந்துவீச்சால் எதிரணியை திணறடித்தவர். மனதில் பட்டத்தை பேசும் குணாதிசயம் கொண்டவர். ஒரு காலத்தில் பல இளசுகளின் ஹாட் பாவோரிட் இவர்தான். இருப்பினும் ஐபில் சூதாட்ட பிரச்சனை காரணமாக, பிசிசிஐ விதித்த தடை விதித்தது. எனினும் மலையாள சினிமாவில் கால் பதித்து புதிய பாதையில் பயணிக்கிறார். இந்நிலையில் நடிகர் அஜித் பற்றி ஸ்ரீசாந்த் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், தல என்பது யார் என்று அனைவருக்கும் தெரியும் அது அஜித் அண்ணா மட்டும் தான். சிலர் தோனியை தல என்று கூறுகிறார்கள் அவர் சிறந்த வீரர் நல்ல கேப்டன்.அவர் மீது எனக்கு மரியாதை உள்ளது. ஆனால் தல என்று வரும் போது அது அஜித் அண்ணா மட்டும் தான். மற்றவர்கள் கொஞ்சம் கீழே தான் என பேசியுள்ளார். இவரின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் அனைவரின் வைரலாகியுள்ளது. இந்த விடியோவை அஜித் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news