Inandoutcinema - Tamil cinema news

அடேயப்பா 78 வயதில் இந்த வேலையா.. ரஜினியை கவர்ந்த ரசிகை

சென்னை:நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்றத்துக்கு உறுப்பினர்களை சேர்க்க மன்ற நிர்வாகிகளுக்கு உத்தர விட்டுள்ளார்.

மேலும், அணிகள் வாரிய தலைமை நிர்வாகிகளை அழைத்து  உறுப்பினர் சேர்க்கையை அதிகரிக்க  அவர்களுக்கு ஆலோசனைகளும்  வழங்கி வருகிறார்.

விரைவில், கோவையில் நடக்கவுள்ள பிரம்மாண்ட மாநாட்டில் நடிகர் ரஜினிகாந்த் தனது கட்சியின் பெயரையும், கொடியையும் அறிமுகப்படுத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ரஜினி மக்கள் மன்றத்துக்கு 78 வயதனான சாந்தா என்ற பெண்மணி தீவிர உறுப்பினர் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். ரஜினியின் தீவிர ரசிகரான அவர் இன்று காலை நடிகர் ரஜினிகாந்த்தை அவரது வீட்டில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்துக்கு ஏராளமான பெண் ரசிகர்கள் இப்போதும் உள்ளனர். எம்.ஜி.ஆ க்கு பிறகு ரஜினிக்கு தான் ஏராளமான பெண் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில், ரஜினி மக்கள் மன்றத்துக்கு அவரது ரசிகை உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டு வரும் தகவல் தற்போது இணையத்தளத்தில் பரவி வருகிறது.

இது ரஜினியின் ரசிகர்களுக்கும் புத்துணர்ச்சியை அளித்துள்ளது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news