Inandoutcinema - Tamil cinema news

நடிகர் மோகன்லாலுக்கு நட்சத்திரங்கள் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: தென் இந்தியாவின் புகழ்பெற்ற நடிகர் மோகன்லால் இன்று தனது 58வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதனையொட்டி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிரேமம் படம் நடிகை அனுபம்மா மரமேஸ்வரன் நான் உங்கள் ரசிகை என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் நிவின் பாலி இந்தியாவின் தலைச்சிறந்த நடிகருக்கு பிறந்தநாள் வாழ்த்து என்று குறிப்பிட்டு மோகன்லாலுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இதே போன்று நடிகர் மம்மூட்டி, சூரியா, விஜய், ஜூனியர் என்டிஆர், அல்லு அர்ஜுன் ரசிகர்கள், கேரளா விக்ரம் பேன்ஸ், இயக்குனர்கள் உள்பட பலர் #happybirthdaylaletta ஹேஷ் டெகுடன்  அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது இந்திய அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது.

இந்நிலையில், நடிகர் மோகன்லால் தனது பிறந்தநாளையொட்டி ரசிகர்களுக்கு ரசிகர்களுக்கு பரிசாக  அவர் நடித்துள்ள நீராலி  படத்தின் டிரைலரை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த படம் வரும் ஜூன் மாதம் 14ம்தேதி ரிலீஸ் ஆகிறது.

இது தவிர மோகன்லால், இயக்குனர் கே.வி.ஆனந்த்  இயக்கத்தில் நடிகர் சூரியா நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news