September 21, 2018
Inandoutcinema - Tamil cinema news

நடப்பதையெல்லாம் பார்த்தா ஆரண்ய காண்டம் படம் தீம் தான் ஞாபகத்துக்கு வருது.. சொன்னது யார் தெரியுமா?

சென்னை: கர்நாடகா தேர்தல் முடிவுகள் கடந்த செவ்வாய்கிழமை வெளியானது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் பாஜக 104, காங்கிரஸ் 78, மதசார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களை கைபற்றின.

இதில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் 104 இடங்களை கைபற்றிய பாஜக முதல்வர் பதவி ஏற்று கொள்ள அம்மாநில ஆளுநர் நேற்று இரவு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று இன்று காலை கர்நாடகா முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுக் கொண்டார்.

பெரும்பான்மையில்லாத பாஜக முதல்வராக பொறுப்பேற்றதற்கு காங்கிரஸும் – ஜெடிஎஸ் எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்து சட்டசபை வளாகத்திலுள்ள காந்தி அருகே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்தியில் பவரை கையில் வைத்து கொண்டு மாநில தேர்தலில் ஆட்சியை பிடிக்க  பாஜகவினர் இதுபோன்ற செயல்கள் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பலர் தங்கள் எதிர்ப்புகளையும், கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சினிமா தயாரிப்பாளர் தனன்ஜெயன் நாட்டில் நடக்கும் அரசியல் சம்பவங்களை ஆரண்ய காண்டம் படத்துடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது டிவிட்டர் பதிவில்; ‘‘அரசியல் உலகில் நடப்பதை பார்க்கும் போது ஆரண்ய காண்டம் படத்தின் தீம் தான் ஞாபகத்துக்கு வருகிறது நீதி, நேர்மை, நியாயம் அனைத்தையும் மறந்து விடு. ‘‘எதுதர்மம்? எது நமக்கு தேவையோ, அதுவே தர்மம்’’. என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, நடிகர் பிரகாஷ்ராஜ் கர்நாடக தேர்தலில் மோடிக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இதே போன்று பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news