Inandoutcinema - Tamil cinema news

இது அலுவதற்கான நாள் அல்ல. தமிழர்கள் வீறுகொண்டு எழுவதற்கான நாள் – ஜிவி பிரகாஷ்

ஈழத்தமிழர்கள் இலங்கை அரசுப் படைகளால் இனப்படுகொலை செய்யப்பட்ட ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் கடற்கரையில் நடத்தப்படுகிறது. ஈழத்தமிழர்களின் தாயகப்பகுதியான வடக்கு, கிழக்கு இலங்கை மாகாண மக்கள் அனைவரும் இந்நிகழ்வில் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவேந்தல் இடத்தில், இன்று முற்பகல் 11 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்படும் என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடக்கும் கொடுமைகளை எதிர்த்து முதலில் குரல் கொடுக்கும் திரை பிரபலம் நடிகரும் இசையமைப்பாளருமான G.V.பிரகாஷ் ஆவர். இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்று, அனிதா குடும்பத்தாருக்கு நேரில் ஆதரவு தெரிவித்து, STERLITE போராட்டத்திற்கு ஆதரவு கரம் நீட்டி தற்பொழுது காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தியது வரை அவரது போராட்டம் தொடர்கிறது. இந்நிலையில் இலங்கையில் நடந்த இனப்படுகொலையை தமிழர்கள் மறவாதிருப்பதற்காக, மே 18, வீழ்வதற்கான நாள் கிடையாது. தமிழர்கள் வீறுகொண்டு எழுவதற்கான நாள் ஆகும் என தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் கூறியுள்ளார். மேலும் பலர் இலங்கையில் இறந்த ஈழத்தமிழர்களை நினைவு கூறும் விதமாக மௌன அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news