நடிகை நயன்தாரா பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அறம், வேலைக்காரன் ஆகிய திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றியாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. அறிமுக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்துல லைகா புரோடக்சன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கோலமாவு கோகிலா ஆகும். இந்த படம் சென்னையின் கிரைம் முகத்தை காட்டும் கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த எதுவரையோ என்ற சிங்கிள் ட்ராக் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து கல்யாண வயசு என்ற செகண்ட் சிங்கிள் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த பாடல் எதுவரையோ பாடலை விட 4 மடங்கு பார்வையாளர்களை பெற்று இருக்கிறது. மேலும் தற்போது வரை ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது. சிவகார்த்திகேயன் பாடல் எழுதி அனிருத் இசையமைத்த இந்த பாடல் 50 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.