Inandoutcinema - Tamil cinema news

இயக்குனர் சுப்ரமணி சிவா தந்தை மறவுக்கு பாரதிராஜா இரங்கல்

சென்னை: நடிகர் தனுஷுக்கு முதல்  மாஸ்ஹிட் படம் கொடுத்தவர் இயக்குனர் சுப்ரமணி சிவா. இவர் தற்போது, இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னை படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், இயக்குனர் சுப்ரமணி சிவா அவர்களின் தந்தை வடிவேல் உடல் நலக் குறைவு காரணமாக நேற்று இரவு இறந்தார். அவரது மறைவுக்கு இயக்குனர் பாரதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில், ‘தந்தையை இழந்து துயரம் கொண்டுள்ள தம்பி சிவா அவர்களுக்கு என் சார்பிலும் எங்கள் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பிலும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றுகூறியுள்ளார்.

இயக்குனர் சுப்ரமணி சிவாவும், பாரதிராஜாவின் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை அமைப்பின் உறுப்பினர் ஆவார்

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news