Inandoutcinema - Tamil cinema news

பாசத்திற்குரிய கமல் அவர்களுக்கு.. அன்புடன் பாரதி ராஜா!!!

சென்னை: நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி முழுநேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவ்வபோது.. கால்சீட் கொடுத்துள்ள படத்தின் சூட்டிங்களிலும் கலந்து கொள்கிறார்.

இந்த நிலையில், காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையைக் கோரிவரும் 19ம்தேதி விவசாயிகள், விவசாய சங்கங்கள், அரசியல் கட்சிகள் இணைந்து போராட நடிகர் அழைப்பு விடுத்துள்ளார். அதற்கு தமிழர்கலை இலக்கிய பண்பாட்டு பேரவை அமைப்பை சேர்ந்த இயக்குனர் பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் ‘‘காவிரிக்கான தமிழகத்தின் குரல்’‘ என்கிற போராட்ட களத்திற்கு எங்கள் பேரவைக்கு அழைப்பு விடுத்ததற்கு மிகவும் நன்றி, உங்கள் முயற்சியும் போராட்டமும் வெற்றியடைய வாழ்த்துகிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

டெல்லி உச்சநீதி மன்றத்தில் நடந்து வரும் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக வழக்கில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நீதி மன்றம் அனுமதி வழங்க்கியுள்ளது. மேலும், இதுவரை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த காவிரிநீர் பங்கீடு உரிமை இனிமேல் மேலாண்மை குழுவில் இருப்பவர்களிடம் இருக்கும் இதன்மூலம் தமிழகத்திற்கு சட்டப்படி தேவையான நீர் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news