September 22, 2018
Inandoutcinema - Tamil cinema news

யார் அந்த பிரபலம் என புதிர் போட்ட நடிகர் விவேக். பேராசிரியருக்கு குவியும் பாராட்டுக்கள்

சமீபகாலமாக தனது சினிமா படங்களை குறைத்து கொண்டு, பொது சேவைகளிலும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்குவதிலும் ஆரவம் காட்டி வருகிறார் நடிகர் விவேக். இவர் மறைந்த முன்னாள் ஜனாதிபதியான கலாம் ஐயாவின் தீவிர ரசிகர் ஆவார். இவர் கலாம் ஐயாவின் இறப்பிற்கு பிறகு பல லட்சம் மரக்கன்றுகளை தமிழகம் முழுவதும் நட்டு வைத்திருக்கிறார். மேலும் அதற்கான விழிப்புணர்வும் மக்களிடையே ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் இன்று காலை புதிர் போன்ற ஒரு ட்விட்டை பதிவிட்டார் நடிகர் விவேக். அதில் அவர் கூறியிருப்பத்தாவது : Dear students! ஒரு பிரபலம், தன் டிரைவருக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுத்து sslc அரியர் தேர வைத்து பின் டிகிரி படிக்க அறிவுரை செய்ததால் இப்போது அந்த டிரைவர் ஒரு கல்லூரி பேராசிரியர். who is that Vip? என கேள்வி எழுப்பினார். பின்னர் சில மணி நேரம் கழித்து அவரே அதற்க்கான விடையை கூறியுள்ளார். அதில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, இவர் தான் முன்னாள் கார் ஓட்டுனர். இந்நாள் பேராசிரியர் திரு.கதிரேசன் எனவும் அவரை உருவாக்கியவர் நம் கலாம் அய்யா! எனவும் பதிவிட்டுள்ளார். பின்னர் (என் முந்தைய tweet ஐ படிக்கவும்) என வளையத்திற்குள் பதிவிட்டுள்ளார். கார் ஓட்டுநராக இருந்து பேராசிரியராக உருவான திரு கதிரேசன் அவர்களுக்கு பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news