September 20, 2018
Inandoutcinema - Tamil cinema news

ஹாரர் படங்களில் ஆர்வத்தை செலுத்தும் புதுமுக இயக்குனர்கள்

ஹாரர் படங்களுக்கு மக்கள் மத்தியில் என்றைக்குமே மௌஸ் அதிகம். மினிமம் வசூல் மற்றும் வெற்றியைப் பெற்று தருவதால் புதிய இயக்குனர்களும் ஹார் மூவியை தேர்ந்தெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

அந்தவகையில் அறிமுக இயக்குனர் ஆர்.வி.சுரேஷ் இயக்கவுள்ள ஹாரர் த்ரில்லர் படம் ‘ஐல’  என்கிற ஐஸ்வர்ய லட்சுமி..! .. ரியங்கா பிலிம் புரொடக்சன்ஸ் சார்பில் தம்பி உன்னி கிருஷ்ணன் மற்றும் ஜே.ரவீந்திரன் இந்தப்படத்தை தயாரிக்கின்றனர்.

திரு. தம்பி உன்னிகிருஷ்ணன் ஏற்கனவே மம்மூட்டி , ரேவதி, சிவகுமார் மற்றும் முன்னனி  நடிகர்களை வைத்து தமிழ் , மலையாள படங்களை தயாரித்தவர்.

ஹாரர் த்ரில்லர் படங்களிலேயே புதிய பாணியில் இந்தப் படம் உருவாக இருக்கிறது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப் படத்தில் கதாநாயகியாக சாந்தினி நடிக்கிறார்.

எமன் படத்தில் வில்லனாக நடித்த அருள் டி.சங்கர் மற்றும் போராளி திலீபன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.  எழுத்து & இணைஇயக்கம்: சந்தோஷ்மேனன்.

பிரபல இசையமைப்பாளரிடம் உதவியாளராக இருந்து வரும் டி..ஆர்.கிருஷ்ண சேத்தன் இசையமைப்பாளராகவும், டி.ஆர்.பிரவீண் எடிட்டராகவும் இதில் அறிமுகமாகிறார்கள். பிரபல ஒளிப்பதிவாளர் வெற்றியிடம் பணிபுரிந்த ஹேமந்த் இந்தப் படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். பிச்சைக்காரன்,

சலீம் படங்களில் கலை இயக்குனராக பணியாற்றிய ஆனந்த் மணி இந்தப் படத்தின் கலை இயக்குனர் பொறுப்பை ஏற்றுள்ளார்.

இப்படத்தின் பூஜை நேற்று மாமல்லபுரத்தில் இருக்கும் Tun L Hotel House Boat Resort-ல் உயர்திரு. ராஜேஷ்தாஸ்  I.P.S ( ADDG Prohibition Enforcement, Tamilnadu) அவர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

விரைவில்  இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. சென்னை, கேரளா மற்றும் ஐரோப்பா நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news