ஹிப் ஹாப் தமிழா கதாநாயகனாக நடிக்கும் 2வது படத்தில் யூடியூப் பட்டாளம் – விவரம் உள்ளே

மீசைய முறுக்கு படம் மூலம் நடிகராகவும், இயக்குநராகவும் அறிமுகமானாவர் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி ஆகும். இவர் கதாநாயகனாக நடிக்க புதிய படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தை அவ்னி மூவிஸ் சார்பில் சுந்தர்.சி தயாரித்திருந்தார். இவர் கதாநாயகனாக நடித்த முதல் படத்தையும் சுந்தர்.சி-யே தயாரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு ஜோடியாக புதுமுகம் அனகா அறிமுகமாகிறார். இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இப்படத்தை இயக்கும் பொறுப்பை D.பார்த்திபன் தேசிங்கு ஏற்றிருக்கிறார். மான் கராத்தே, ரெமோ’ படங்களில் இணை இயக்குநராக பணிபுரிந்த இவர், இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படம் ஹாக்கி விளையாட்டு சம்பந்தப்பட்ட படம் என்பதால் பல ஊர்களுக்கும் சென்று படமாக்கியுள்ளார்.

இறுதிக்கட்ட காட்சிகள் மட்டும் 20 நாட்கள் படமாக்கப்பட்டது. காரைக்கால், தரங்கம்பாடி, பாண்டிச்சேரி மற்றும் சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்த நிலையில், அடுத்த வருட ஆரம்பத்தில் திரைக்கு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் கரு.பழனியப்பன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இவருடன் விக்னேஷ்காந்த், பாண்டியராஜன், கௌசல்யா, எரும சாணி விஜய், ஹரிஷ் உத்தமன், ஷாரா, பழைய ஜோக் தங்கதுரை, அஜய் கோஷ், சுட்டி அரவிந்த், வினோத், குகன், Put Chutney ராஜ் மோகன், பிஜிலி ரமேஷ், அஷ்வின் ஜெரோமி ஆகியோர் நடிக்கிறார்கள். இயக்குநர் சுந்தர்.சி மிகப் பெரிய பொருட்செலவில் தயாரிக்கிறார் என கூறப்படுகிறது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தின் முதல் புகைப்படம் மற்றும் தலைப்பு நாளை வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news