நயன்தாராவை ஆட்டோக்காரியா வச்சு, கண்டிப்பாக படம் எடுப்பேன் – வெங்கட் பிரபு

ரோட்டரி இன்டர்நேஷனல் டிஸ்ட்ரிக்ட் 3232 Ann’s Forum வழங்கும் Honey queens fiesta என்ற நிகழ்ச்சி சென்னை கிரவுன் பிளாஸா ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிங்க் ஆட்டோ திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. இதில் விக்ரம் பிரபு, வெங்கட் பிரபு மற்றும் முன்னணி திரை பிரபலங்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். விழாவில் கலையரசி என்ற பயனாளிக்கு ஆட்டோ வழங்கப்பட்டது. Ann’s Forum சார்பில் இந்த திட்டங்களுக்காக 6 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

விழாவில் பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு பேசினர். அதில் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான வெங்கட் பிரபு பேசும்போது கூறியதாவது : சினிமாவில் பார்த்த ஒரு விஷயம் இங்கு நிஜத்தில் நடப்பது நல்ல விஷயம். பெண்கள் பாதுகாப்பு தற்போதைய மிக முக்கியமான விஷயம்.

மகளிருக்காக பிரத்யேகமாக தொடங்கப்பட்டிருக்கும் இந்த பிங்க் ஆட்டோக்களில் ஜிபிஎஸ் வைத்து ஆட்டோவை கண்காணிக்கிறார்கள். இது பெண்கள் பாதுகாப்பை மிகவும் உறுதி செய்யும். இந்த பிங்க் ஆட்டோ மிகப்பெரிய வெற்றியை பெற்று, நயன்தாராவை நான் ஆட்டோக்காரி, ஆட்டோக்காரினு பாட வைத்து, படம் எடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என இயக்குனர் வெங்கட் பிரபு கூறியுள்ளார். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news