Inandoutcinema - Tamil cinema news

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கிறார் – விவரம் உள்ளே

மலையாள சினிமாவில் முன்னணி நடிகரான துல்கர் சல்மானுக்கு தமிழ் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு இருப்பதால் அவ்வப்போது தமிழ் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் இவருடைய நடிப்பில் இறுதியாக சோலோ, நடிகையர் திலகம் போன்ற படங்கள் வெளியானது. இதன் பிறகு இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்திலும் ஆர்ஏ கார்த்திக் இயக்கத்தில் வான் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் அடுத்ததாக நடிகர் மற்றும் அரசியல்வாதியான கமல் ஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 வில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அது பற்றி என் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் ஏதும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆர்ஏ கார்த்திக் இயக்கத்தில் உருவாக்கி வரும் வான் படத்தின் பூஜை போடப்பட்டுள்ளது.

அதில் தமிழ் துல்கர் சல்மான், படக்குழுவினர் மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக விளங்கும் கேஎஸ். ரவிக்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதனால் நடிகர் துல்கர் சல்மான், கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கிறார் என்ற வதந்தி இனயத்தில் பரவ ஆரம்பித்தது.

இருப்பினும் மற்ற புகைப்படங்கள் வைத்து வதந்தி பரவுவது தடுக்கப்பட்டது. வான் படத்தின் பூஜையின் பொழுது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இனயத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news