விஸ்வாசம் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு – தெறிக்கவிட்ட ரசிகர்கள்

வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில், 4வது முறையாக சிவா இயக்கியுள்ள படம் விஸ்வாசம். சத்யஜோதி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில் விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதல் முறையாக அஜித் படத்திற்கு இமான் இசையமைத்திருக்கிறார்.

ரஜினி நடித்த பேட்ட படத்துடன் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. மதுரை மற்றும் தேனியைப் பின்னணியாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. தூக்கு துரை என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அஜித். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் டீஸர் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து தணிக்கை குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

படத்தைப் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள், படத்துக்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளனர். இந்தப் படத்தின் தமிழக விநியோக உரிமையை, நயன்தாராவின் ‘அறம்’ படத்தைத் தயாரித்த கே.ஆர்.ஜே. ஸ்டுடியோஸ் கைப்பற்றியுள்ளது. அத்துடன், ஏரியா வாரியாக யார் யார் விநியோக உரிமையைப் பெற்றுள்ளனர் என்ற விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு யு சான்றிதழ் பெற்றுள்ள செய்தியை இணையத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news