September 26, 2018
Inandoutcinema - Tamil cinema news

பிரஷாந்த் பாண்டியராஜ் -அஷோக் செல்வன் கூட்டணியில் உருவாகும் “JACK” படத்தின் ஒன் லைன்

சென்னை: ஜிவி.பிரகாஷ்குமார் நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த படம் “புருஸ் லீ”. இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரஷாந்த் பாண்டியராஜ் இயக்கி இருந்தார். இவர் அடுத்து அஷோக் செல்வனை வைத்து படம் இயக்குகிறார்.

இந்த பிரிபுரொடக்‌ஷன் பணிகள் தொடங்கி உள்ள நிலையில் படத்தின் தலைப்பு மற்றும் முதல் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. படத்துக்கு “JACK” என்று தலைப்பிட்டுள்ளனர்.

இப்படத்தின் கதை பற்றி இயக்குனர் பிரஷாந்த் பாண்டியராஜ் கூறுகையில்;  இது ராணுவத்தில் பணியாற்றும் நாய்க்கும் – ராணுவ வீரருக்கும் உள்ள உறவைப்பற்றிய கதை. கதை முழுவதும் வட இந்தியாவில் நடக்கிறது. வரும் நவம்பர் மாதம் படபிடிப்பு தொடங்கவுள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.

இந்த படத்தில் பாலா சரவணன் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ஒரு நாய் நடிக்கிறது. ஒரு நாள் கூத்து, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட படத்துக்கு இசையமைத்த ஜெஸ்டின் பிரபாகரன் இந்த படத்துக்கு இசை அமைக்கிறார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news