Inandoutcinema - Tamil cinema news

இவர்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன் என கூறிய ஜிவி பிரகாஷ் – விவரம் உள்ளே

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பளர்களில் ஒருவராக வளம் வருபவர்தான் யுவன் ஷங்கர் ராஜா ஆகும். யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் ஹரீஷ் கல்யாண், ரைஸா வில்சன் நடித்திருக்கும் படம் பியார் பிரேமா காதல் ஆகும்.

இயக்குனர் இளன் இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இசைஞானி இளையராஜா கலந்து கொண்டு இசையை வெளியிட்டார்.

இந்த விழாவில் முன்னணி திரை பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். இந்த கலந்துகொண்டு பேசிய நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் கூறியதாவது : முதல் முறையாக யுவன் ஒரு படம் தயாரித்திருக்கிறார். நான் ஏற்கனவே படம் தயாரித்திருக்கிறேன்.

அந்த அனுபவத்தில் அவருக்கு ஆதரவாக இங்கு வந்திருக்கிறேன். அவரின் சர்வம் ஆல்பம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன். பின்னணி இசையில் யுவன் ஒரு ராஜா. சமீபத்தில் கூட பேரன்பு பின்னணி இசை மிகச்சிறப்பாக இருந்தது என கூறினார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news