Inandoutcinema - Tamil cinema news

சூரியாவின் அடுத்த படத்தை இயக்கும் ஹரி, தயாரிப்பு சன் பிக்சர்ஸ் – 100 பறக்குற ஜீப்பு பார்சல்!

சென்னை: இயக்குனர் ஹரியுடன் தொடர்ந்து சிக்கம் 1, 2, 3ம் பாகங்களில் நடித்து வந்த நடிகர் சூரியா ஒரு சேஞ்சுக்காக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் “தான சேந்த கூட்டத்தில்” நடித்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது.

இதையடுத்து ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த இயக்குனர் செல்வராகவன், யுவன் சங்கர் ராஜா கூட்டணியில்  சூரியா “என்ஜிகே” நடத்தில் நடக்க தொடங்கினார். இப்படத்தில் சூரியாவுக்கு ஜோடியாக ரகூல் பிரித் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடிக்கின்றனர். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார்.

படத்தின் அப்டேட்டுகள் அவ்வபோது டிவிட்டரில் தெரிவிக்கப்பட்டு வைரல் ஆகி வருகிறது. இந்த தீபாவளிக்கே படம் ரிலீஸ் ஆக வேண்டி இருந்தது. ஆனால், போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளால் படம் தள்ளிப்போடப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் அல்லது பொங்கலுக்கு படம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், சூரியாவின் பேவரைட் இயக்குனரான ஹரியிடன் அவர் மீண்டும் இணைகிறார். இந்த படத்தை சன் பிக்‌சர்ஸ் தயாரிக்கிறது. மற்ற நடிகர்கள், கலைஞர்கள் பற்றி தெரியவில்லை. இதுகுறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இப்படம் NGK படம் ரிலீஸுக்கு பிறகு இந்த படத்தின் பணிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news