September 22, 2018
Inandoutcinema - Tamil cinema news

இந்த நாட்டில் வெளியாகும் முதல் தமிழ் திரைப்படம் மெர்சல்தான்

அட்லி – விஜய் – ஏ.ஆர்.ரஹ்மான் காம்போவில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான `மெர்சல்’ திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. அந்தப் படத்தில் விஜய் பேசிய அரசியல் வசனங்கள் வைரலானது.

இதனால் விமர்சனத்திலும் வசூலிலும் மெர்சல் நல்ல வரவேற்பை பெற்றது. இன்னிலையில் மெர்சலின் வெற்றி இந்தியாவோடு நின்றுவிடவில்லை. சீனாவிலும் தொடரவுள்ளது. சீனாவின் HGC என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மெர்சல் திரைப்படத்தின் உரிமத்தைப் பெற்றுள்ளது.

மெர்சல் சீன மொழியில் டப் செய்யப்பட்டு விரைவில் சீனாவில் வெளியாக உள்ளது. இதற்கு முன்னதாக தங்கல், பஜ்ரங்கி பாய்ஜான், சுல்தான் போன்ற இந்திய படங்கள் சீனாவில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. தற்போது மெர்சல் திரைப்படம் வெளியாகவுள்ளது.

சீனாவில் வெளியிடப்படும் முதல் தமிழ்த் திரைப்படம் மெர்சல்தான் என கூறப்படுகிறது. மெர்சல் படத்தை சீனாவில் வெளியிடப்போகும் ஹெச்.ஜி.சி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தலைவர் லி யிங், மெர்சல் உணர்வுபூர்வமான திரைப்படம் என வெகுவாக பாராட்டியுள்ளார்.

 

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news