September 21, 2018
Inandoutcinema - Tamil cinema news

கமல் ஹாசன் ரசிகர்களுக்கு ஒரு ருசிகர செய்தி – விவரம் உள்ளே

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வரும் நடிகர் கமல்ஹாசன் தற்போது தொகுத்து வழங்கிவரும் நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தாலும் பெரும்பாலானோர் எதிர்மறையாக விமர்சனம் செய்து வருகின்றனர். நடிகர் கமல் ஹாசன் தற்போது ஒரு அரசியல் கட்சியை துவங்கியுள்ளார்.

அதை அவர் சமீபத்தில் பதிவும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னிலையில் அவர் நடிப்பில் வெளிவரவிருக்கு விஸ்வரூபம்-2 படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படம் முடிந்த பிறகு இந்தியன் 2 நடிப்பார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தனியார் தொலைக்காட்சியில் தற்போது அவர் தொகுத்து வழங்கி வரும் அந்நிகழ்ச்சி முடிந்த பிறகு, தான் ஷங்கர் இயக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சி வருகிற செப்டம்பர் இறுதியில் முடிவடைவதால், அக்டோபரில் கமல் இந்தியன்-2 படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் படப்பிடிப்பை சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் வெளிநாடுகளிலும் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

முதல் பாகத்தில் வர்ம கலையால் ஊழல்வாதிகளை வீழ்த்தும், இந்தியன் தாத்தா கதாபாத்திரம் பேசப்பட்டது. அதே கதாபாத்திரம் இரண்டாம் பாகத்திலும் வருவதுபோல் இயக்குனர் ஷங்கர் திரைக்கதை அமைத்து இருப்பதாக கூறப்படுகிறது. முழுமையான அரசியல் படமாக இது இருக்கும் என்று கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார்.

இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. அதேநேரத்தில் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சபாஷ் நாயுடு படத்தின் படப்பிடிப்பிலும் கமல் மீண்டும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இவ்விரு படங்களை பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கபடுகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news