சந்தோஷ் நாராயணனின் “பூ மணக்க” ஜிப்ஸி பட பாடல்!

குக்கூ, ஜோக்கர் போன்ற தரமான படங்களை இயக்கிய எழுத்தாளர் ராஜூமுருகன் அவர்கள் இயக்கிய அடுத்த படம் ஜிப்ஸி. ஜீவா ஹீரோவாக நடித்த இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நடாஷா சிங் நடித்துள்ளார். இந்த படத்தில் குதிரை ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புகளிடையில் சற்றுமுன் இப்படத்தின் டீசரை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நடிகர் ஜீவா இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.

 குதிரை, கிட்டார் இசைக்கருவியுடன் நாடு முழுவதும் சுற்றும் இளைஞன்.. அவனுக்கு ஒரு பெண்ணின் மீது ஏற்படும் காதல் என இயக்குனர் அழகாக இப்படத்தை உருவாக்கியுள்ளார். இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தின்  “பூ மணக்க” என்ற பாடல் யூடியூபில் வெளியாகியுள்ளது. இதோ அந்த பாடல் வீடியோ…

Previous «
Next »
Inandoutcinema Scrolling cinema news