இந்திய சினிமாவின் மிக முக்கிய படமாக #GVP17 அமையும்…

சென்னை: ஜி.வி.பிரகாஷ்குமாரை நடிகர் என அழைப்பதா? அல்லது இசையமைப்பாளர் என்று அழைப்பதா என்று தெரியவில்லை. காரணம் அந்த அளவுக்கு இரண்டு துறைகளிலும் மாஸ் காட்டி வருகிறார்.

சமூக பிரச்னைகளில் பொதுமக்களுக்கு குரல் கொடுப்பதிலும் ஜிவி.பிரகாஷ்குமாரை அடிக்க ஆள் இல்லை என்றே சொல்ல வேண்டும். எந்த பொதுப்பிரச்னையாக இருந்தாலும் முதல் ஆளாக தனது கண்டங்களை பதிவு செய்கிறார்.

இந்நிலையில், ஜிவி.பிரகாஷ்குமாரின் அடுத்த பட அறிவிப்பு ரசிகர்களிடம் இப்போதே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

2006ல் வெயில் படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார் ஜி.வி.பிரகாஷ்குமார். இந்த படத்தை இயக்குனர் வசந்தபாலன் இயக்கி இருந்தார். சுமார் 12 வருடங்களுக்கு பிறகு ஜி.வி.பிரகாஷ்குமாரை வைத்து படம் இயக்கிவருகிறார் வசந்தபாலன்.

இதில், ஜிவிபி ஹிரோவாக நடிக்கிறார், பசங்க பாண்டி, ராதிகா, ஜெனிப்பர், மணிமேகலை, பாகுபலி வில்லன் பிரபாகர், பள்ளிப்பருவத்திலே நந்தன் ராம், அபர்ணதி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்துக்கு இன்னும் டைட்டில் முடிவு செய்யப்படவில்லை.

படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ‘பர்ஸ்ட் லுக்’ போஸ்டரை நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அதில் ’’இந்திய சினிமாவின் மிக முக்கிய படமாக இப்படம் அமையும்’’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இப்படத்தை கிரிகேஷ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரிக்கிறார். படத்தின் சூட்டிங் பழைய மாமல்லபுரம் சாலையில் அமைக்கப்பட்டுள்ள செட்டில் படபிடிப்பு நடந்து வருகிறது.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news