Inandoutcinema - Tamil cinema news

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தின் சுவாரசிய தகவல் – #GVPrakash

சென்னை: வசந்தபாலன் இயக்கிய “வெயில்” படம் மூலம் ஜீவி பிரகாஷ் குமார் தமிழ்சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தற்போது அவர் நடிப்பு, இசை என கலக்கி வருகிறார்.

இந்நிலையில், இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜிவிபி நடிக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது. படத்தின் சூட்டிங் தொடங்கப்பட்டு சென்னை மற்றும் அதை சூற்றியுள்ள பகுதிகளில் நடந்து வந்தது.  இந்த படத்தில் நடிகை ராதிகா, ‘பசங்க’ பாண்டி, ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ அபர்ணதி, ஜெனிஃபர், மணிமேகலை, ‘பாகுபலி’ வில்லன் பிரபாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

படத்தின் அறிவிப்பு வெளியாகும்போதே இந்த படம் இந்திய அளவில் பேசப்படும் ஒரு முக்கியமான் படமாக அமையும் என்று ஜிவிபிரகாஷ் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், படத்தின் தலைப்பு மற்றும் முதல் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. தொடர்ந்து இன்று காலை 2ம் லுக் போஸ்டரை நடிகர் ஜிவிபிரகாஷ் வெளியிட்டார்.

இந்த படத்தில் நடிகர் ஜீவி பிரகாஷ் கருணா என்ற கதாபாத்திரத்தில் ஒரு கைதியாக நடித்திருக்கிறார். படத்தின் இறுத்திக்கட்ட படபிடிப்பு பணிகள் தற்போது நடந்து வருகிறது. டீசர், டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. Krikes Cine Creations சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரிக்கிறார்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news