Inandoutcinema - Tamil cinema news

அறிமுக போட்டியிலேயே அதிரடி சதம் விளாசிய பிரிதிவ் ஷா – விவரம் உள்ளே

ஆஸ்திரேலியா தொடருக்கு முன்னால் ஒரு முன்னோட்டமாக இந்திய அணி மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதற்காக ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து ராகுலும் பிரித்வி ஷாவும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கேப்ரியல் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் ராகுல் எல்பிடபிள்யூ ஆனார். அம்பயர் அவுட் கொடுத்ததும், பிரித்வியுடன் ஆலோசித்துவிட்டு ரிவியூ கேட்டார் ராகுல்.

ரிவியூவில் அவுட் உறுதியானதால், ராகுல் டக் அவுட்டாகி வெளியேறினார். ஒரு ரிவியூவும் வீணானது. இதையடுத்து பிரித்வியுடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். முதல் முறையாக இந்திய அணியில் இடம் பிடித்திருக்கும் பிருத்வி ஷா ஆடும் விதம் அறிமுக வீரர் என்பதை நமக்கு மறக்க செய்கிறார். அறிமுக போட்டியிலேயே அதிரடி சதம் விளாசிய அசத்தியுள்ளார் பிரிதிவ் ஷா.

99 பந்துகளில் அவர் சதத்தை கடந்தார். இது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக வீரர் அடித்த மூன்றாவது அதிவேக சதமாக பதிவாகியுள்ளது. மேலும் குறைந்த வயதில் இந்தியர் முதல் சதத்தை பதிவு செய்தவர் பட்டியலில் சச்சினுக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.

தற்போதைய நிலவரப்படி இந்திய அணி 35 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. பிரிதிவ் ஷா 102 ரன்களுடனும், புஜாரா 74 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Previous «
Next »

In&out Cinema is a Indian digital media company based in Chennai, Tamilnadu. Founded by Francis Markus.B in 2016. In&out Cinema Provides verity of news, videos, reviews, exclusive interviews. on cinema, politics, culture, business, tech. sports around the world in Indian regional language Tamil. We are available in Face Book, Twitter, Instagram, Youtube, Google +, Pinterest and other social media platform.
  • facebook
  • twitter
  • googleplus
  • youtube
  • instagram
  • pinterest
Inandoutcinema Scrolling cinema news